vkrnajur vkrnajur Author
Title: புதிய ரேஷன் கார்டு வழங்க தடை: தேர்தல் ஆணையம் அதிரடி !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்குவற்கு  தேர்தல் நடத்தை விதிமுறையின்படி தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மே 16 ஆம் தேத...
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்குவற்கு  தேர்தல் நடத்தை விதிமுறையின்படி தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் மே 16 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
இதனால், புதிய திட்டங்கள் எதுவும் அறிவித்து நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் முன்னர் தொடர்ந்து நடந்து வரும் பணிகளை தொடர்ந்து நடைமுறைபடுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறையால் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய குடும்ப அட்டை கேட்டு பல ஆயிரக்கணக்கான மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வீடுகளுக்கும் நேரில் சென்று ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், புதிய ரேஷன் கார்டு வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் அதாவது மே மாதம் 20 ஆம் தேதிக்கு பிறகுதான் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கான பணிகள் தொடங்கும்.
குடும்ப அட்டை, இலவச பட்டா போன்றவை தற்போது பெற முடியாது. ஆனால் வீடு, நிலம் வாங்குபவர்கள் தங்களது பெயர்களுக்கு பட்டா பெறலாம். பட்டா மாற்றம் செய்யலாம். அதற்கு எவ்வித தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top