Mohamed Farook Mohamed Farook Author
Title: கழுத்தில் கத்தி வைத்து கேட்டாலும் ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூறமாட்டேன்: அசாதுதீன் ஓவைசி
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பாரத மாதா குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தி...
பாரத மாதா குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பாரத மாதா குறித்த கருத்தில் எந்த சட்டத்தையும், விதியையும் மீறவில்லை என்று தெரிவித்தார். தன்னுடைய நாட்டுப் பற்று பாரத மாதா கருத்தில்தான் அடங்கியிருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

`இந்தியாவின் பெருமையை வளரும் தலைமுறையிடம் எடுத்துக் கூற ‘பாரத் மாதா கி ஜெய்’ என அனைவரும் கூற வேண்டும் என்று, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்திருந்தார்.

கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும், அவ்வாறு தெரிவிக்க மாட்டேன் என்று, ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top