Mohammed Farook Mohammed Farook Author
Title: நேரம் சரியில்லாத பன்னீர்செல்வம்..
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
அ.தி.மு.க.,வில் முதல்வருக்கு அடுத்தபடியாக, செல்வாக்கோடு வலம் வந்தவர் பன்னீர்செல்வத்துக்கு இப்ப நேரம் சரியில்லைங்கோ…தேர்தலில் போட்டியிட, ‘...
அ.தி.மு.க.,வில் முதல்வருக்கு அடுத்தபடியாக, செல்வாக்கோடு வலம் வந்தவர் பன்னீர்செல்வத்துக்கு இப்ப நேரம் சரியில்லைங்கோ…தேர்தலில் போட்டியிட, ‘சீட்’ பெற்று தருவதாகக் கூறி, அவரது ஆதரவாளர்களும், நெருக்கமானவர்களும் வசூல் வேட்டை நடத்தியதால..ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களை தொடர்ந்து நீக்கிவருகிறது.

அதிமுக தலைமை நேற்று கூட தேனி மாவட்ட பேரவை செயலர் வரதராஜன்; மாவட்ட மாணவர் அணி செயலர் ஜெகதீஷ்; ஆண்டிப்பட்டி ஒன்றிய மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 

தேனி மாவட்ட பேரவை செயலராக, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., தங்க தமிழ்செல்வன்; மாவட்ட இளைஞர் அணி செயலராக ராஜ்குமார்; மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை இணை செயலராக மணி; ஆண்டிப்பட்டி ஒன்றிய மாவட்ட பிரதிநிதியாக வரதராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில், பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அரசியல் செய்து வருபவர், தங்கதமிழ்செல்வன்; அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனாலா மனம் நொந்து போன ஓ.பி.எஸ் இப்ப சென்னையில இல்லாம தேனிக்கு போயி டேரா போட்டுருக்காராமே…காதும் காதும் வச்சு பேசிக்கிறாங்க..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top