vkrnajur vkrnajur Author
Title: தேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களுக்கு கட்டுப்பாடு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், 40 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எ...
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், 40 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பேனர்கள் வைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்  என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதுகுறித்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் மூலம் உண்டாகும் கழிவுகள், கழிவுநீர் மற்றும் மழைநீர் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். 

குறிப்பாக சென்னை பெருமழை பெய்த நாளான்று, 3 ஆயிரத்து 400 டன் குப்பைகள் வெளியேற்றப்பட்டன. அதில், 35 முதல் 40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருந்ததால் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிகளவில் பிளாஸ்டிக் கொடிகள், விளம்பர பலகைகளை பயன்படுத்த அனுமதி வழங்கினால், சுற்றுச்சூழல் சீர்கேடு உருவாக்கும் என்றும் மனுவில் அவர்  கூறியிருந்தார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசின் மாசுக்கட்டுபாட்டு வாரியம் தாக்கல் செய்த பதில் மனுவில், 40 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்த தடை விதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து வழக்கை  முடித்து வைத்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top