Mohammed Farook Mohammed Farook Author
Title: வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் – ஆளூர் ஷாநவாஸ்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கேரளாவில் இருப்பது போன்று வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என, துபை வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
கேரளாவில் இருப்பது போன்று வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என, துபை வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;
மக்கள் நலக் கூட்டணிக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை என்பது உண்மையல்ல. கடந்த தேர்தல்களில் 10 தொகுதிகளில் நின்றவர்கள் இந்த தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடப் போகிறோம். இந்தமுறை எமது வாக்கு வலிமை நிரூபிக்கப்படும்.

அதிமுக திமுக காங்கிரஸ் பாஜக பாமக ஆகிய கட்சிகளின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் உள்ளன. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மீது எவ்வித ஊழல் வழக்கும் இல்லை.

தமிழகத்தில் பலமுனைப் போட்டி உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது. திமுக அதிமுகவை நிராகரிக்கும் முடிவை பல கட்சிகளும் எடுத்திருப்பது அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

தமிழகத்தில் 1 கோடி புதிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள், திமுக அதிமுகவை ஆதரிக்க மாட்டார்கள். மாற்று அரசியலை முன்வைக்கும் மக்கள் நலக் கூட்டணிக்கே அவர்களின் வாக்குகள் கிடைக்கும்.

எனவே நாங்கள் ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி அமையும். அப்போது மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைக்கு வரும். கேரளாவைப் போன்று வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்துவோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top