vkrnajur vkrnajur Author
Title: குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார...
குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘’குவைத் போலீசாரால் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 10 பேர் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இவர்களுக்கு, முதலாளிகள் பேசியபடி லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை. இதனால் தங்கள் குடும்பத்திறகு பணம் அனுப்ப முடியவில்லை.
சம்பளம் மட்டுமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இழந்த நிலையில், இந்தியாவுக்கு அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதனையும் முதலாளிகள் ஏற்கவில்லை.
அதன் பின்னர் முதலாளிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 11 பேரும் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒருமாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முதலாளிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
குவைத்தில் சிக்கியுள்ள அப்பாவி மீனவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் பத்திரமாக மீட்டு நாட்டிற்கு அனுப்பி வைக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் நீதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top