vkrnajur vkrnajur Author
Title: தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்னர் எந்த திட்டங்களையும் அறிவிக்கக் கூடாது-தேர்தல்ஆணையம்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, தே...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் அனைத்துத் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், செயலாளர்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்த பிறகு அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகளின்படி, எந்தவொரு புதிய திட்டங்களை அறிவிப்பதோ, புதிய அரசாணைகளை வெளியிடுவதோ கூடாது.

ஆனாலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு ஓரிரு நாட்கள் கழித்து, முன் தேதியிட்ட அரசாணைகள் வெளியிடப்படுவதாகவும்; தேர்தல் தேதி வெளியிடப்படுவதற்கு முன்பே அந்த அரசாணைகளை வெளியிட்டது போல் காட்டிக்கொள்வதாகவும், முந்தைய தேர்தல்களின் போது புகார்கள் வந்தன.

இது போன்ற புகார்களை தவிர்க்கவேண்டும். இதைத் தவிர்ப்பதற்காக புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் தேதி அறிவிப்பு மீடியாக்களில் வெளியானதும், அரசாணை பதிவேட்டில் பதியப்பட்ட கடைசி அரசாணைக்குக் கீழே ஒரு எல்லைக் கோட்டை சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் போடவேண்டும்.

அந்த கோடு போடப்பட்ட பக்கத்தை அவர் புகைப்படம் எடுக்கவேண்டும். அதை இணைத்து, தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு, மீடியாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட செய்தி வெளியான 2 மணிநேரத்துக்குள் அனுப்பி வைக்கவேண்டும். இது தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் ஆவணமாக பதியப்படும்.

அரசாணை தொடர்பாக ஏதாவது புகார்கள் கூறப்பட்டால் அதற்கு உடனே பதிலளிக்க முடியும். மேலும், தவறான குற்றச்சாட்டை கூறுவதும் தவிர்க்கப்படும்.

அரசுச் செயலாளர்கள் யாரும் தலைமையகத்திற்கு வெளியே இருந்தால், இதற்காக கீழ் நிலை அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும்.

அவர் மேற்சொன்ன நேரத்துக்குள் அந்த தகவலை தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top