Mohammed Farook Mohammed Farook Author
Title: பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை உண்டியல் பணத்தை எண்ண சொன்னதால் சர்ச்சை!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
சங்கரன்கோவில் அருகே கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணிக்காக, பள்ளி மாணவர்களை பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளத...
சங்கரன்கோவில் அருகே கோவில் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் பணிக்காக, பள்ளி மாணவர்களை பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கரநாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நேற்று, யாகசாலை மண்டபத்தில் கோயில் துணை ஆணையர் பொன்.சுவாமிநாதன், பண்பொழி கோயில் உதவி செயல் அலுவலர் செல்வக்குமாரி ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.

இதில் ஒரு சில ஆன்மீக அன்பர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில், ஆட்கள் பற்றாக்குறையால், கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சங்கரநாராயணசுவாமி கோயில் ஆரம்ப பாடசாலை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பள்ளியின் சீருடையிலேயே சிறுவர்களான மாணவ, மாணவிகள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top