vkrnajur vkrnajur Author
Title: இனி தேசிய அவசரகால எண் "112" என மத்திய அரசு முடிவு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இந்தியாவின் தேசிய அவசரகால எண்ணாக 112 இருக்கும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100 என்ற எண்ணும...
இந்தியாவின் தேசிய அவசரகால எண்ணாக 112 இருக்கும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100 என்ற எண்ணும், மருத்துவ உதவிக்கு 108 என்ற எண்ணும், அவசர கால அழைப்புகளுக்காக 101, 102 என பல்வேறு எண்களும் செயல்பட்டு வருகின்றன. 

ஆனால், அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன. 

எனவே, இந்தியாவிலும் அவசர கால உதவிக்கு மற்ற நாடுகளை போல் ஒரே எண்ணாகா இருக்கலாம் என்று தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்தது. 

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி காவல்துறை உதவி எண் தொடங்கி, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், பெண்களுக்கான உதவி எண், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்ணாக இது இருக்கும். 

இதன்மூலம் அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் எஸ்.எம்.எஸ் மூலம் வரும் அழைப்புகளும் பெறப்படும். இந்த சேவை வெற்றிகரமாகவும், திறமையாகவும் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்தந்த மாநிலங்களில் அழைப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளூர் மொழிகளில் பேசுவோரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் என அதன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top