vkrnajur vkrnajur Author
Title: மலைவாழ் மக்கள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குசாவடிகளுக்கு பஸ்கள் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2892 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மலைவாழ் மக்களுக்காக அமைக்கப்பட்டு...
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 2892 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மலைவாழ் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகள் பஸ் வசதி இல்லாத பகுதியில் உள்ளது.

கடந்த தேர்தலின் போது மலைவாழ் மக்கள் வாக்களிக்க நீண்ட தூரம் நடந்து சென்று பெரும் அவதிக்குள்ளானார்கள். அவர்கள் அடுத்த தேர்தலில் தங்களது சிரமத்தை தேர்தல் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தனர்.

அதனடிப்படையில் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி பகுதியில் வாக்காளர்கள் வசதி குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லங்கால் ஆதிவாசி கிராம வாக்குச்சாவடி, கவுண்டம் பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூமனூர் உள்பட பல்வேறு வாக்குசாவடிகளுக்கு பஸ் வசதி இல்லை. எனவே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் இந்த கிராமங்களில் ஆய்வு நடத்தி உரிய பஸ் வசதியை ஏற்படுத்தி தர அறிவுறுத்தி இருந்தனர்.

அதனடிப்படையில் போக்குவரத்து அதிகாரிகள் ஆதிவாசி கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்து ஆய்வு நடத்தினர். ஆதிவாசி கிராமங்களில் இயக்கப்படும் பஸ்களை வாக்குசாவடிகள் வரை கூடுதலாஇயக்க தேவையான நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் தேர்தல் சமயத்தில் மட்டும் பஸ்களை இயக்காமல் இப்போது இருந்தே பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் அதிக அளவில் மலைவாழ் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டு வாக்களிப்பாளர்கள் என எதிர்பார்க்கப்ப டுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top