vkrnajur vkrnajur Author
Title: சவூதியில் நடுவானில் வபாத்தான விமானி!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சவுதி அரேபியாவில் பறக்கும் விமானத்தில் வைத்து விமானி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். சவுதி...
சவுதி அரேபியாவில் பறக்கும் விமானத்தில் வைத்து விமானி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

சவுதி அரேபியாவின் பிஷா விமான நிலையத்தில் இருந்து 220 பயணிகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது இந்த விமானம்.

ஜெத்தா நோக்கி சென்றுள்ள இந்த விமானத்தின் முக்கிய விமானிக்கு திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து திடீரென்று நிலைகுலைந்த அந்த விமானி அவரது இருக்கையிலேயே திடீரென்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விமானி உயிரிழந்த சம்பவம் அறிந்ததும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட துணை விமானி நடந்த நிகழ்வினை விவரித்துள்ளார்.

இதனிடையே விமானி உயிரிழந்துள்ள சம்பவம் பயணிகளுக்கு தெரிய வரவே, பயணிகள் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகளில் சிலர் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்பட்ட துணை விமானி,

ஜெத்தா விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். விமான நிலையத்தில் தயார் நிலையில் நின்றிருந்த மருத்துவ குழுவினர் உயிரிழந்த விமானியின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

துணை விமானியின் துணிச்சல் மிகுந்த செயல்பாடுகள்தான் பயணிகளின் அச்சத்தை போக்கி விமானத்தை பத்திரமாக தரையிறங்க காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top