vkrnajur vkrnajur Author
Title: பட்டப்பகலில் காதல் தம்பதி மீது கொடூர தாக்குதல்: கணவன் பலி, மனைவி கவலைக்கிடம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பேருந்து நிலையத்தில் காதல் தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை...
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை பேருந்து நிலையத்தில் காதல் தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் அரிவாளுடன் தப்பிச்செல்லும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

உடுமலைபேட்டை அருகே உள்ள குமரலிங்கம் பகுதியை சேர்ந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொண்டு, உடுமலைபேட்டை பேருந்து நிலையம் சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல், இருவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்மநபர்களை பொதுமக்களில் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top