vkrnajur vkrnajur Author
Title: உலகின் நீண்ட தூர இடைவிடாத விமான சேவையை புகழ் பெற்ற விமான நிறுவனமான துபாய்எமிரேட்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
 உலகின் நீண்ட தூர இடைவிடாத விமான சேவையை புகழ் பெற்ற விமான நிறுவனமான துபாய் எமிரேட்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது. உலகின் மிக நீண்ட தூரம் ...
 உலகின் நீண்ட தூர இடைவிடாத விமான சேவையை புகழ் பெற்ற விமான நிறுவனமான துபாய் எமிரேட்ஸ் நிறுவனம் துவக்கியுள்ளது.
உலகின் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A 380, துபாயில் இருந்து தனது பயணத்தை தொடங்கி நியூசிலாந்தை சென்றடைந்துள்ளது. முதல் பயணமாக இந்த விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து 14,200 கிலோமீட்டர் பயணம் செய்து நியூசிலாந்தின் ஆக்லாந்தை சென்றடைந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு குவான்டாஸ் பயணிகள் விமானம் சிட்னியில் இருந்து டல்லாசுக்கு தொடர்ச்சியாக 13,800 கிலோமீட்டர் பயணம் செய்தது இதுவரை உலகின் நீண்ட தூரம் பயணம் செய்த சாதனையாக இருந்தது. இந்த சாதனையை எமிரேட்ஸ் ஏர்பஸ் A 380 முறியடித்துள்ளது. இதன் பயண நேரமாக 17 மணி நேரம் 15 நிமிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானமானது ஆக்லாந்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு 14,200 கிலோமீட்டர் தூரத்தை 17 நேரங்களில் 15 நிமிடங்களில் கடந்து துபாயை மீண்டும் வந்தடையும் துபாயில் இருந்து ஆக்லாந்துக்கு வழக்கமாக போயிங் 777 விமானமே சேவையில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். தற்போது உலகின் மிகநீண்ட தூரம் இடைவிடாமல் பயணம் செய்யும் எமிரேட்ஸ் எபஸ் A 380 பயன்படுத்துவது குறிப்பிடதக்கது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top