vkrnajur vkrnajur Author
Title: நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதிக்கீடு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வரும் சட்ட மன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு  மெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.    தமிழகத்தில் விரைவில் நடைபெற ...
வரும் சட்ட மன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு  மெழுகுவர்த்திகள் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
  தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது.   இந்த நிலையில் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்  அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்தது.

ஆனால் இந்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.   இந்த, நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரகேசர் சார்பில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும்  அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்த போது, இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.   இதனையடுத்து, நாம் தமிழர் கட்சிக்கு மெழுகுவர்த்திகள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிதந்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top