vkrnajur vkrnajur Author
Title: அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை கைது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
டெல்லியில் அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி நகரி...
டெல்லியில் அழுகையை நிறுத்தாத இரண்டு வயதுக் குழந்தையை தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வரும் ரிக்ஷா தொழிலாரி நரிஸ் ஷேக் (28). இவருக்கு பிர்தவுஸா பேகம் என்ற மனைவியும், ராகுல் (9), சவுரயா(2) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாட் நரிஸ். அப்போது குழந்தை சவுரயா அழுதுள்ளார்.
இதனால் தூக்கம் கலைந்த நரிஸ், குழந்தையைச் சமாதானப்படுத்த மனைவியைத் தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த நரிஸ், அழுகையை நிறுத்தும்படி குழந்தையை மிரட்டி அடித்துள்ளார்.
ஆனால், குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதனால் மேலும் கோபத்தில் ரொட்டிக் கட்டையால் குழந்தையை சரமாரியாக நரிஸ் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சவுரயா, பரிதாபமாக உயிரிழந்தது.
இந்தக் காட்சிகளை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல், ஓடிச்சென்று அக்கம்பக்கத்தாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், நரிஸுக்கு தர்மஅடி கொடுத்து, அவரைப் போலீசில் ஒப்படைத்தனர்.
நரிஸ் மீது, கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சவுரயாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top