vkrnajur vkrnajur Author
Title: 7000 கோடி ரூபா கடன் காரணமாக இந்தியாவை விட்டு தப்பி ஓடிய “ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர்” அணி உரிமையாளர் விஜய் மல்லையா!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா இந்தியாவைவிட்டு கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே வெளியேறி விட்டதாகவும் இந்திய மத்தி...
ரோயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா இந்தியாவைவிட்டு கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே வெளியேறி விட்டதாகவும் இந்திய மத்திய அரசு, இந்திய உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு எஸ்கேப் ஆகியுள்ள விஜய் மல்லையா, இந்திய ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் நிலுவை வைத்துள்ளார்.
முன்னதாக கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து,இந்திய உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணையில் மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கடந்த மார்ச் 2-ம் தேதியே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக சி.பி.ஐ. தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையா, இதற்கு 2 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும்,அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
விஜய் மல்லலையாவின் ராஜ்யசபா எம்.பி. மெயில் முகவரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியுள்ளது.அடுத்த விசாரணையின்போதாவது விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்று வங்கிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடை யே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் இருந்து விஜய் மல்லையா விலகியதற்காக, டியாஜியோ நிறுவனம் வழங்கிய ரூ. 515 கோடியை பெறவும் இந்திய கடன் வசூலிப்பு முகமை விஜய் மல்லையாவுக்குத் தடை விதித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top