vkrnajur vkrnajur Author
Title: ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு முடிவு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.
7 பேரும் ஏற்கனவே 24 வருடம் சிறையில் கழித்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பியிருந்தனர். தமிழக அரசு தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நளினி தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் உள்ள 7 பேரின் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. இவர்களை விடுவிக்கும் முடிவு தொடர்பாக மத்திய அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top