vkrnajur vkrnajur Author
Title: ஐபோன் 6SE விற்பனைக்கு வருகிறது !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. விழாவை ஆப்பிள...
கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் புதிய ஐபோன் எஸ்.இ. ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டது. விழாவை ஆப்பிள் சி.இ.ஓ. டிம் குக் தொடங்கிவைத்து பேசினார். ஆப்பிள் நிறுவனத்திற்கும், அமெரிக்க அரசுக்கும் நடந்துவரும் சட்ட போராட்டங்கள் பற்றி டிம் குக் பேசினார். பின்னர் புதிய ஐபோன் எஸ்.இ. வெளியிடப்பட்டது.

ஐபோன் எஸ்.இ.-ன்  முக்கிய அம்சங்கள்: 

64-பிட் ஆப்பிள் ஏ9 செயலி, 4 இன்ச் திரையுடன் 4k வீடியோ ரெக்கார்டிங்,1 ஜி.பி. ரேம், 12 மெகா பிக்சல் கேமரா, Hey Siri, லைவ் போட்டோ, 16 ஜி.பி. மற்றும் 32 ஜி.பி. சேமிப்பு ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

மேலும் புளூடூத் (4.2), மேம்படுத்தப்பட்ட வை-பை, புதிய மைக்ரோ போன், பிங்கர் பிரிண்ட் சென்ஸாருடன் கூடிய ஆப்பிள் பே ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளன. 16 ஜி.பி. போனின் விலை 399 டாலராகவும், 32 ஜி.பி. போனின் விலை 499 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஐபோன் எஸ்.இ. போனானது ஐபோன் 6எஸ் போனை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐபோன் எஸ்.இ. போன் மார்ச் 31-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. மற்ற நாடுகளில் மே மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top