vkrnajur vkrnajur Author
Title: மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவில் 50 சதவீத ஒதுக்கீடு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட்  கூறியதாவது:- ரயில்களில் மூத்த குடிமக்களுக்களுக்கான முன்பதிவு இடஒதுக்கீட்டை அதிக...
இது குறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் முகமது ஜாம்ஷெட்  கூறியதாவது:-
ரயில்களில் மூத்த குடிமக்களுக்களுக்கான முன்பதிவு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கைகள் வந்தன.
அதையடுத்து, அவர்களின் முன்பதிவு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி ரயில்வே பட்ஜெட்டில் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
அந்த அறிவிப்பானது, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால், ஒரு ரயிலில் மூத்த குடிமக்கள் அதிகபட்சமாக 80 முதல் 90 படுக்கை வசதி கொண்ட இருக்கைகளைப் பெற முடியும்.
இதுதவிர, 45 வயதைக் கடந்த பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும் முன்பதிவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
ரயில்களில் சரக்குகளை ஏற்றிச் செல்வதில் போட்டிகளைச் சமாளிப்பதற்காக, சரக்கு ரயில் கட்டணக் கொள்கையில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, சரக்கு ரயிலில் ஒரு டன் நிலக்கரியை 18 கிலோ மீட்டர் தொலைவு கொண்டு செல்வதற்கு ரூ.72 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதே தொலைவுக்கு ரூ.47 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கொள்கை, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அடுத்த நிதியாண்டில் கூடுதலாக ரூ.500 கோடியை ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முகமது ஜாம்ஷெட் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top