Mohammed Farook Mohammed Farook Author
Title: உலக மக்கள் கண்டு வியக்கும் இந்தியர்களின் 5 உணவுப் பழக்கங்கள்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இந்தியர்கள் அனைத்தையும் ரசித்து, ரசித்து செய்பவர்கள். கட்டிடக்கலை,மருத்துவம், கல்வி, கலைகள் என்று மட்டுமில்லாமல், சமையலிலும் கூட பெரும்...
இந்தியர்கள் அனைத்தையும் ரசித்து, ரசித்து செய்பவர்கள். கட்டிடக்கலை,மருத்துவம், கல்வி, கலைகள் என்று மட்டுமில்லாமல், சமையலிலும் கூட பெரும் ரசனைக் கொண்டவர்கள் இந்தியர்கள். அந்தந்த காலத்திற்கு ஏற்ற அனைத்து உணவு மற்றும் பானங்கள் நமது இந்திய உணவு முறையில் இருக்கின்றன.

இவை அனைத்தும் இயற்கையாக தயார் செய்து சமைக்கக் கூடியவை. மற்றும் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. உலகமே நமது பழக்கவழக்கங்களை பின்பற்றி நன்மை அடைய முனையும் போது தான், நாம் அதை மெல்ல, மெல்ல ஒதுக்கி வருகிறோம் என்பது வருந்தத்தக்கது….

மசாலா பொருட்கள்
கொத்தமல்லி, மஞ்சள், வெந்தயம், கடுகு, சீரகம், ஏலக்காய், சிவப்பு மிளகு, இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் என உடல்நலத்திற்கு மற்றும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் மருந்துகளை தான் உணவில் சர்வ சாதாரணமாக சேர்ப்பதால். உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவது குறைகிறது. மற்றும் பெரும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் செய்கிறது.

கறிவேப்பிலை, மஞ்சள்
பெரும்பாலும் அனைத்து உணவிலும் நாம் கறிவேப்பிலை மற்றும் மஞ்சளை சேர்க்கும் உணவுப் பழக்கம் வைத்திருக்கிறோம். இவை. நோய் எதிர்ப்பு அதிகரிக்க, இரத்த அழுத்தம் குறைய, கொலஸ்ட்ரால் குறைய, இதய நலன் பாதுகாக்க பல வகைகளில் உதவுகின்றன.

மஞ்சள்
மஞ்சளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் குணம் இருக்கிறது. மேலும், இது கொழுப்பாக மாறியிருக்கும் கலோரிகளை கரைக்கவும் உதவுகிறது.

புதிய உணவு
இந்தியர்கள் பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்து உண்ணும் பழக்கத்தை பின்பற்றுவதில்லை. தினமும் சமைக்கும் பழக்கம் இந்தியர்களுக்கு இருக்கிறது. பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட மற்றும் ஃபிரிட்ஜில் வைத்து உண்ணும் உணவுகள் உடல்நலத்தை நாள்பட கெடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.

இதனால் தான் பெரும்பாலும் புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு போன்ற கோளாறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

இந்திய பானங்கள்
நமது நாட்டு குடி பானங்கள் அனைத்தும் இயற்கையானவை, இளநீர், மோர், எலுமிச்சை நீர், மசாலா தூத், டீ என அனைத்தும் இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுபவை. மேலும், இவை அனைத்தும் வெவ்வேறு இயற்கை சுவை கொண்டவை. ஒவ்வொரு காலநிலைக்கு உடலுக்கு நன்மை அளிப்பவை.

சப்பாத்தி
சப்பாத்தி, ரொட்டி / ஃபுல்கா இவை டயட்டிற்கு சிறந்த உணவுகள். இதில் எண்ணெய் இல்லை, ஆதலால் அதிகமான கலோரிகள் மற்றும் கொழுப்பு உடலில் சேராது. மேலும், இதிலிருக்கும் புரதம் மற்றும் கார்ப்ஸ் எளிதாக செரிமானம் ஆகக் கூடியவை.

சட்னி
உலக நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்திய உணவில் விரும்பும் விஷயங்களில் முதன்மையானது சட்னி வகைகள். ஒரு உணவிற்கு பலவகை சட்னி இந்தியாவின் சமையல் முறை மற்றும் இவை அனைத்தும் வெவ்வேறு சுவைகள் கொண்டவை. நமது இந்திய பாரம்பரிய சட்னி வகைகள் நாவிற்கு ருசியும், உடலுக்கு நன்மையையும் சேர்ப்பவை ஆகும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top