vkrnajur vkrnajur Author
Title: விபத்துக்களை தடுக்க 3D பெயின்டிங் -அசத்தல் பெண்கள்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
புதுமை படைப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என குஜராத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்துள்ளனர். இன்று சாலை விபத்துகள் ஓட்டுநரின் கவனக்கு...
புதுமை படைப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல என குஜராத்தை சேர்ந்த பெண்கள் நிரூபித்துள்ளனர். இன்று சாலை விபத்துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் பெரும்பாலும் நடந்தேறுகிறது.
 ஓட்டுநரின் கவனக் குறைவால் குழந்தைகள், குறிப்பாக பள்ளியை கடக்கும் போதுதான் இந்த விபத்துக்கள் பெரும்பாலும் அரங்கேறுகிறது. இதை தடுக்க புதுமை விரும்பிகளான சௌமியா பண்டியா தக்கர் மற்றும் சகுந்தலா பண்டியா காயத்ரி ஆகியோர் ஒரு புதுமையான ஐடியா செய்துள்ளனர். அதாவது நடைபாதையினர் சாலையை கடக்க பயன்படுத்தும் வரிக்குதிரை சாலை கடப்பில்,  3டி எனும் முப்பரிமாண ஒரு புதுமையான பெயிண்டிங்கை செய்து பாராட்டை பெற்றுள்ளனர்.
traffic1அதாவது இந்த முப்பரிமாண வரிக்குதிரை அமைப்பு,  அதை கடக்கும் மக்களுக்கு சாதாரண வரிக்குதிரை கோடுகளாகதான் தெரியும். ஆனால் சாலையில்  வரும் வாகன ஓட்டுநர்களின் பார்வையில் பார்த்தால்,  அது சாலை பிளாக் போல தெரியும். அதனால் ஓட்டுநர்கள் வாகனத்தை நிறுத்த முயற்சி செய்வார். இதனால் விபத்து தடுக்கப்படும். இதுபோன்ற பெயிண்டிங், முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் அருகே குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 90% விபத்துகள் தடுக்கப்படும். இதையே நாமும் பின்பற்றலாமே!!.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top