காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் ஏரிக்கரையில் டிராக்டர் கவிழ்ந்து பெண் சாவு! 3 பேர் காயம்!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
  வி.களத்தூரில் நேற்று செவ்வாய்க்கிழமை டிராக்டர் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். நமதூர் அருகேயுள்ள பி...
 http://img.dinakaran.com/data1/DNewsimages/TamilDailyNews_7092052698136.jpg
வி.களத்தூரில் நேற்று செவ்வாய்க்கிழமை டிராக்டர் கவிழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

நமதூர் அருகேயுள்ள பிம்பலூரை சேர்ந்தவர் சேகர் மனைவி சுதா (30). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி தனக்கொடி (31), அம்மாசி மனைவி அஞ்சலை (35), சாரதி மனைவி சுதா (29). இவர்கள், இனாம் அகரத்தை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான டிராக்டரில் செங்கல் ஏற்றும் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், திருவாளந்துறையிலிருந்து டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு வி.களத்தூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். வி.களத்தூர் ஏரிக்கரை அருகே சென்றபோது டிராக்டரின் முன்புற டயர் வெடித்து, சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த சேகர் மனைவி சுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் டிராக்டரில் இருந்த சுதா, தனக்கொடி, அஞ்சலை ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து டிராக்டர் ஓட்டுநர் இனாம் அகரத்தை சேர்ந்த கணேசனை (26) கைது செய்தனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top