vkrnajur vkrnajur Author
Title: நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்கள் அடைப்பு: மத்திய அரசுக்கு எதிர்ப்பு !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் விரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று முதல் ...
தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் விரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன.

2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த பட்ஜெட்டில், வெள்ளி நீங்கலான தங்கநகை உள்பட பிறவகை ஆபரணங்களுக்கு ஒரு சதவீதம் கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தங்க நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை தொழில் சார்ந்த தொழிற்கூடங்கள், கைவினை கலைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்க நகை நிறுவனங்கள் இன்று(02.03.2016) முதல் 3 நாட்களுக்கு கடைகளை அடைப்பதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து, சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உற்பத்தி செய்யப்படும் தங்கத்தின் மீது ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த வரி விதிக்கப்படுவதால், நகை வாங்கும் நுகர்வோருக்கு, ஒரு சவரனுக்கு ரூ.250 கூடுதலாக சுமை ஏற்படும்.

மேலும், உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக பராமரிக்கவேண்டும். ஏற்கனவே உள்ள வேலைப்பளுவில் மிக அதிகமான சுமையாக இது அமையும்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள நகை நிறுவனங்கள், வியாபாரிகள், நகை சார்ந்த தொழிற்கூடங்கள், கைவினை கலைஞர்கள் இன்று( 02.03.2016 புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு கடைகளை அடைத்து, கலால் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க உள்ளோம்.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான நகைக்கடைகள் அடைக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 35 ஆயிரம் நகைக்கடைகள் மற்றும் அதனை சார்ந்த 12 லட்சம் தொழிலாளர்கள் இந்த கடை அடைப்பில் பங்கேற்க உள்ளனர்.

இதனால், அரசுக்கு ரூ.1,000 கோடி வர்த்தக மற்றும் வருவாய் இழப்பு ஏற்படும். இதை ஒரு அடையாள போராட்டமாக தான் செய்கிறோம்.

தங்க நகைகளுக்கு கலால் வரி ஒரு சதவீதம் விதிப்பதைவிட, தங்கம் இறக்குமதியில் ஒரு சதவீதத்தை ஏற்றி இருக்கலாம்.

ஏற்கனவே தங்கம் இறக்குமதிக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒரு சதவீதத்தை அதில் ஏற்றி எங்களிடம் இருந்து மத்திய அரசு பெற்றிருக்கலாம்.

ஆனால் கலால் வரி மூலம் அதை பெறுவதை ஏற்க முடியாது. கலால் வரி சட்டம் மிக கடுமையான சட்டம். இதை சாதாரண தொழில் செய்யும் நிறுவனங்கள் மீது திணிப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. உடனடியாக மத்திய அரசு இதை திரும்ப பெற வேண்டும் இவ்வாறு ஜெயந்திலால் ஷலானி கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top