vkrnajur vkrnajur Author
Title: சட்டமன்ற வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களுக்காக ரூ.28 இலட்சம் நிர்ணயம் : தேர்தல்ஆணையம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் : சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாவும் நடத்திட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் தலைமையி...
பெரம்பலூர் : சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும், சுமூகமாவும் நடத்திட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இன்று மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் அரசியல் கட்சியினருக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்ப்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சேவை மையங்களை தொடர்பு கொண்டு உரிய விளக்கங்களை பெறலாம்.
தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் தொடர்பான செலவினங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.
அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது தேர்தல் பிரச்சாரம், விளம்பரங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக அதிகப்பட்சமாக ரூ.28 இலட்சம் வரை செலவுசெய்யலாம்.
மேலும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்களை மேற்கொள்வதற்காக புதியதாக ஒரு வங்கிகணக்கினை தொடங்கிட வேண்டும். மேலும் அரசியல் கட்சியினர் தாங்கள் மேற்க்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பான சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றிற்கு உரிய அனுமதி பெற வேண்டும். மேலும் அவ்வாறு மேற்கொள்ளும் விளம்பரத்தின் மீது அந்த அனுமதி எண்ணை குறிப்பிட வேண்டும்.
அரசியல் கட்சியினர் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 17 இடங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுள்ளன.
மேற்கொண்டு அரசியல் கட்சியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக வேறு ஏதேனும் இடங்கள் தேவைப்பட்டால் அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெறும் பட்சத்தில் அது குறித்து பரிசீலிக்கப்படும்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாடான மகளிர் வாக்குச்சாவடிகள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் பெரம்பலூரிலும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் இலப்பைகுடிக்காட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்களை பெண் நபர்களாக நியமிக்க முன் வர வேண்டும்.
மேலும், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உடும்பியம் உராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகள் என மொத்தம் 4 மாதிரி வாக்குச்சாவடிகளும்,
குன்னம் சட்டமன்ற தொகுதியில் மருவத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி, மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் காட்டியான் குடிகாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய 4 மாதிரி வாக்குச்சாவடிகளும் மாதிரி வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்காக ஊர்வலம் மற்றும் வாகன அனுமதி பெற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பித்து, அனுமதி கடிதங்களை பெறலாம்.
இதில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரச்சார அனுமதி வழங்கப்படும். தேர்தல் பிரச்சாரங்களுக்காக அரசியல் கட்சியினர் தனியார் இடங்களில் கட்சி அலுவலகங்களை அமைப்பதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top