Mohammed Farook Mohammed Farook Author
Title: சென்னையில் நாளை அதிகாலை தோன்றும் சூரிய கிரகணத்தை 26 நிமிடம் பார்க்க முடியும்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும். அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூ...
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படும்.

அமாவாசை தினத்தன்று தான் சூரிய கிரகணம் நிகழும். இதனால் சூரியன் முழுவதுமாகவோ அல்லது பகுதியோ மறைக்கப்படும்.

பொதுவாக ஓராண்டில் 2 முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை நடப்பதுண்டு. சில ஆண்டுகளில் சூரிய கிரகணம் ஏற்படாமலும் போகலாம்.

இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ந்தேதி ஏற்பட்டது. நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை (புதன்கிழமை) நிகழ்கிறது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.49 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. இந்தோனேசியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த சூரிய கிரகணம் 100 சதவீதம் தெரியும்.

இந்தியாவின் பெரும் பாலான பகுதிகளில் பாதி சூரிய கிரகணம்தான் தெரியும். இந்தியாவின் மேற்கு, வடமேற்கு பகுதிகளில் இதை காண இயலாது.
சென்னையில் நாளை காலை 6.20 மணிக்கு சூரியன் உதயமாகிறது. 6.22 மணி முதல் 6.48 மணி வரை 26 நிமிடங்கள் சென்னையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

விசாகப்பட்டினத்தில் 28 சதவீதம், திரிபுராவில் 15.1 சதவீதம், அசாமில் 11 சதவீதம், கொல்கத்தாவில் 18 சதவீதம் புவனேசுவரத்தில் 24 சதவீதம், பாட்னாவில் 12 சதவீதம், போர்ட்பிளேயரில் 49 சதவீதம் சூரிய கிரகணம் தெரியும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top