vkrnajur vkrnajur Author
Title: ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்: ராஜேஷ் லக்கானி தகவல்.
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தல...
தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வானொலியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான ஒரு நாள் தேர்தல் செய்திகளை சேகரிப்பது பற்றிய பயிற்சி முகாமை ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார்.
அதற்குப் பிறகு அவர் பேசியதாவது: ‘தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இது வரை பெறாதவர்கள் எளிய முறையில் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையம் வரும் திங்கட்கிழமை முதல் செயல்படும். அடுத்த மாதம் 15ம் தேதி வரை இத்தகைய வசதி இருக்கும்.
இந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் . இத்தகைய மையங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
தபால் மூலம் பெற விரும்பினால் கூடுதல் துரித அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் 100 சதவீதம் நேர்மை 100 சதவீதம் வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஊடகங்கள் எடுத்து செல்ல வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 மாதிரி வாக்குச் சாவடி என மொத்தம் 1000 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
மேலும், வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் நெரிசலை தவிர்க்க 1950 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விவரத்தை தெரிந்துக் கொள்ளும் வசதி இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் மூலம் இதுவரை ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை முறையாக பரிசீலனை செய்து சரியான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழு அரசிடம் ஒப்படைக்கும்’ என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
எஸ்.எம்.எஸ் வசதி
வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் கமிஷன் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுபற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது ” வாக்களர் பட்டியலில் தங்களுடைய பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள ஒருவர், தன்னுடையை வாக்களர் அட்டை எண்ணை டைப் செய்து 1950 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அனுப்ப வேண்டும்.
அப்படி அனுப்பினால், அவரின் செல்போன் எண்ணிற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும். அதில் வாக்காளர் பெயர், முகவரி, அவர் ஓட்டுப்போட வேண்டிய வாக்குப்பதிவு மையம் போன்ற விவரங்கள் அனுப்பப்படும்.
அதேபோல், தேர்தல் தினமன்று, தான் ஓட்டுப் போடப் போகும், வாக்குப்பதிவு மையத்தில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ‘கியூ’ என்று டைப் செய்து தன்னுடைய வாக்காளர் அட்டை எண்ணையும் சேர்த்து 1950 எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினால், மொத்தம் எவ்வளவு பேர் அந்த வாக்குப்பதிவு மையத்த்தில் ஓட்டுப் போடுவதற்காக நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவரும்” என்று கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top