Mohammed Farook Mohammed Farook Author
Title: டி20 போட்டியில் தோற்ற பாகிஸ்தான் அணி மீது கோபமடைந்த அந்நாட்டு ரசிகர்கள்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள் மிக...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததையடுத்து அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த கோபமடைந்துள்ளனர்.

உலக கோப்பை டி20 தொடரில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் சனிக்கிழமை, கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை குவித்து, பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி பாகிஸ்தான் ரசிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்நாட்டின் வீதிகளில் பெரிய திரைகள், எல்சிடி தொலைக்காட்சிகளில் போட்டியை ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவை வெற்றி பெறாத பாகிஸ்தான் அணி இதுவரை 11வது முறையாக தோல்வியை சந்தித்தது. இதனால் கோபமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள், தொலைக்காட்சி பெட்டிகளை வீதிகளில் போட்டு உடைத்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.

2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டியின் போதும், இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top