vkrnajur vkrnajur Author
Title: ஆஸ்கார் விருது 2016- பட்டியல்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
தி ரிவனெண்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் லியோனார்டோ டி காப்ரியோ. இத்திரைப்படத்தில் ஹக் கிளாஸ் ஆக நடித்த இவர் பர...
தி ரிவனெண்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் லியோனார்டோ டி காப்ரியோ. இத்திரைப்படத்தில் ஹக் கிளாஸ் ஆக நடித்த இவர் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தனது ஆஸ்கர் உரையில் பேசியுள்ளார்.
சிறந்த நடிகை: ப்ரீய் லார்ஸன்
முதல் முறையாக அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ப்ரீய் லார்ஸன் சிறந்த நடிகைக்கான விருதை ரூம் படத்திற்காக பெற்றார். தன் மகனை வெளியுலகை அனுபவிக்க வைக்கும் தாயாக இப்படத்தில் லார்ஸன் நடித்துள்ளார்.
சிறந்த இயக்குனர்: அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ்
தி ரிவெனெண்ட் படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதை அலெக்சாண்ட்ரோ கான்சல்ஸ் பெற்றுள்ளார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இவர் சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.
சிறந்த திரைப்படம்: ஸ்பாட் லைட்
டாம் மெக்கார்த்தி இயக்கியுள்ள ”ஸ்பாட் லைட்” சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. திரில்லர் ட்ராமா பகுதியில் இடம்பெறும் இப்படம் பாதிரியார் ஒருவரின் குற்றச்செயல்களை மையமாக கொண்டது.
சிறந்த பாடல்: ரைடிங்க்ஸ் ஆன் த வால்
சாம் ஸ்மித் பாடியுள்ள ரைடிங்க்ஸ் ஆன் தி வால் பாடல் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றுள்ளது. இது ஜேம்ஸ் பாண்ட் படமான “ஸ்பெக்டர்” திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.
சிறந்த ஒளிப்பதிவாளர்: இம்மானுவேல் லுபெஸ்கி
மெக்சிகன் ஒளிப்பதிவாளர் இம்மானுவேல் லுபெஸ்கி ”தி ரிவனெண்ட்” திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றுள்ளார். “க்ராவிட்டி” மற்றும் “தி பேர்ட் மேன்” திரைப்படங்களுக்காக இரண்டு வருடம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற இவர் தற்போது மூன்றாவது முறையாக தி ரிவனெண்ட் படத்திற்காக ஆஸ்கர் வென்றுள்ளார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படம்: தி இன்சைடு அவுட்
பீட் டாக்டெர் , ரோனி டெல் கார்மென் ஆகியோர் இயக்கிய தி இன்சைட் அவுட் திரைப்படம் சிறந்த அனிமேஷன் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிஸ்னி தயாரித்துள்ள இப்படத்தில் ஒரு மனிதனின் மூலையில் உணர்ச்சிகள் எப்படி வேலை செய்யும் என்ற கற்பனையை கொண்டு உருவாக்கப்பட்ட ஐந்து கதாப்பாத்திரங்களை மையமாக கொண்டது.
சிறந்த ஆவணப்படம் : ஏமி
2011-ஆம் ஆண்டு உயிரிழந்த “ஏமி வைன்ஹவுஸ்” என்கிற ஆங்கில பாடகி மற்றும் பாடலாசிரியரின் வாழ்க்கையை குறித்த ஆவணப்படமே ஏமி. இப்படத்தை ஆசிஃப் கபாடியா இயக்கியுள்ளார்.
மேட் மேக்ஸ் ஃப்யூரி ( Mad Max Fury ), தி ரெவெனண்ட் ( The Revenant ) மற்றும் ஸ்பாட் லைட் ( Spotlight ) ஆகிய திரைப்படங்கள் பல பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top