vkrnajur vkrnajur Author
Title: இன்று தொடங்குகிறது பிளஸ் -2 தேர்வு: 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது, தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும...
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது, தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ் -2 பொதுத்தேர்வு இன்று (04.03.2016) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வு ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ - மாணவிகள் எழுதுகின்றனர்.
பள்ளி மாணவர்களைத் தவிர 42,347 தனித்தேர்வர்கள் என மொத்தம் இந்தாண்டு 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.
இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த தேர்வுக்காக மொத்தம் 2 ஆயிரத்து 421 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ் வழியில் படித்த 5 லட்சத்து 56 ஆயிரத்து 498 பேர் பிளஸ் -2 தேர்வு எழுத உள்ளனர். இதுதவிர 106 சிறைக்கைதிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகிறார்கள்.
புதுச்சேரியில் 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளை சேர்ந்த 14 ஆயிரத்து 337 மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த ஆண்டு முதன்முறையாக ஹால் டிக்கெட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. இதன்மூலம் தேர்வுக்கு முன்பே தேவையான அறிவுரைகளை தெரிந்துகொள்ளலாம்.
பிளஸ் -2 தேர்வில் "காப்பி" அடிப்பதை கண்காணிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 ஆயிரம் பறக்கும் படைகள் மற்றும் நிலையான படை நியமனம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பிட் அடித்தல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் முதலிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top