vkrnajur vkrnajur Author
Title: ஃபேஸ்புக்கில் குறைபாடு கண்டுபிடித்தவருக்கு 15 ஆயிரம் டாலர் பரிசு!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபி...
பெங்களூரை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.
 
ஃபேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட வாய்ப்புள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள இந்த முக்கிய குறையை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் ஆனந்த் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 
மேலும், பொதுவாக ஃபேஸ்புக்கில் கடவுச்சொல் [Password] மறந்துவிட்டால், கடவுச்சொல்லை மறுபதிவு [Reset] செய்ய தொலைபேசி எண் அல்லது இமெயில் கேட்கும். இதற்கு 6 இலக்க எண்ணை பேஸ்புக் நிறுவனம் அனுப்பும்.
 
அதன் மூலமே மறுபதிவு செய்ய முடியும். அவ்வாறு செய்யும்ப்போது 10-12 முறை தவறாக பதிவிட்டால் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுவிடும்.
 
ஆனால், ஆனந்த் பிரகாஷ் வேறொரு முறையையும் கண்டுபிடித்துள்ளார். இந்த எளிமையான முறை மூலம் தங்களது கடவுச்சொல்லை எளிதாக மறுபதிவு செய்து கொள்ளலாம்.
 
இதனையடுத்து பேஸ்புக்கில் இருந்த குறையை சரி செய்யப்பட்டது. மேலும் பேஸ்புக் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு பேஸ்புக் நிறுவனம் 15000 டாலர் அறிவித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top