Mohammed Farook Mohammed Farook Author
Title: 10 வருடங்களுக்கு முன்பு செல்போனில் நிலை!!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோன்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம். * பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளைபடங்களை ...
* பாலிபோனிக் & மோனோபோலிக் ரிங்டோன்களை SMS மூலமாக அனுப்பி அடிக்கடி போட்டுக் கேட்டோம்.

* பிக்சர் மெசேஜ் என்னும் கருப்பு வெள்ளைபடங்களை மாற்றி மாற்றி அனுப்பி சிரித்துக் கொண்டோம்.

* GPRSல் டவுன்லோடு செய்பவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து மலைத்தோம்.

* கேமரா செல்போன் வைத்திருந்தவர்கள்பெரும்பணக்காரர்களாக இருந்தார்கள்.

* பலரது மொபைலில் ஏர்டெல் டோன்களைரிங்டோன்களாக வைத்திருந்தார்கள்.

* மாதாமாதம் 200ரூ ரீசார்ஜ் செய்து வேலிடிட்டியை தக்க வைத்துக் கொண்டோம்.

* ரீசார்ஜ் செய்ய நாலைந்து தெரு தள்ளிப் போகவேண்டியிருந்தது.

* உன் காலர் ட்யூனை கேட்கப் போகிறேன், போனைஅட்டன் செய்யாதே என்று மெசேஜ் அனுப்பினோம்.

* அப்போதெல்லாம் மெசேஜ் பூஸ்டர் கிடையாது, ரேட் கட்டர் கிடையாது, நெட் பேக் கிடையாது, டாப்-அப் கிடையாது.

* தத்துவங்கள் & ஜோக்குகளை டைப் செய்து மொத்தமாக 20, 30 பேருக்கு மெசேஜாகஅனுப்பினோம்.

* அடிக்கடி பேட்டரியை கழட்டியது கிடையாது, சிம் கார்டை கழட்டியது கிடையாது.

* 512-MB மெமரி கார்டின் விலை 500க்கும் குறைவில்லாமல் இருந்தது. கார்டின் சைஸும் பெரிதாக இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களின் கீபேட்பட்டன்கள் தேயாமல் புதிதாகவே இருந்தது.

* 90சதவீத மக்களின் செல்போன்களில் ஜிப் கவர்போடப்பட்டிருந்தது.

* Tag(ரோப்) போட்டு கழுத்தில் தொங்கியவாறு சட்டைப்பையில் செல்போனை வைத்திருந்தார்கள்.

* பல செல்போனுக்கு பின்னால் போன் வந்தால் மின்னும் லைட் ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தார்கள்.

* 30வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக செல்போன் வைத்திருந்தார்கள்.

* வீட்டிலுள்ள சிறுவர்கள் அப்பாவின் செல்போனை தொடவே பயந்தார்கள்.

* மிஸ்டு கால் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தோம்.

* மழையில் நனைந்த செல்போனை மொட்டைமாடியில் காய வைத்து நமக்கு நாமே சரிசெய்து கொண்டோம்.

* செல்போனிலிருந்து லேன்ட்-லைனுக்கு எப்படி போன் செய்வதென்று தெரியாமல்படித்தவர்களிடம்கேட்டோம்.

* Snake Xania மற்றும் Carrom Boardகேம்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்தோம்.

* அடிக்கடி செல்போனை மாற்றாமல் ஒரே செல்போனை 10வருடங்களுக்கும் குறையாமல் வைத்திருந்தோம்.

வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.

ஆனால் இன்று.....................................?
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top