கடனை அடைப்பதற்காக தன்னுடைய மனைவியை ஒரு லட்சத்திற்கு விற்பனை செய்ய விரும்புகிறேன் என்று ஒருவர் பேஸ் புக்கில் விளம்பரம் கொடுத்த சம்பவம் இண்டூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இண்டூரில் வசிக்கும் திலிப் மாலி(30) என்பவர், சமீபத்தில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் “ நான் நிறைய பேரிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அந்த கடனை அடைப்பதற்காக, நான் என்னுடைய மனைவியை ரூ.1 லட்சத்திற்கு விற்பதற்கு தயாராக இருக்கிறேன். யாருக்காவது விருப்பம் இருந்தால் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்” என்று இந்தியில் விளம்பரம் கொடுத்திருந்தார். அதோடு, தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகளின் புகைப்படங்களையும் பதிவு செய்திருந்தார்.
இதைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விளம்பரத்தை கண்ட, அவரின் மனைவியின் உறவினர், இதுபற்றி அந்த பெண்ணிடம் கூறினார். இதனால் கோபம் அடைந்த அவரின் மனைவி, தன்னுடைய கணவன் திலீப் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து திலீப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திலீப்பிடம் பணம் கொடுத்தவர்கள், அதை திருப்பிக்கேட்டு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லை. இதனால் அவர்களிடமிருந்து தப்பிக்க, இண்டூரிலிருந்து வெளியேறி அருகில் உள்ள தனது சொந்த கிராமத்தில் தனியாக வசித்திருக்கிறார் திலீப்.
அதேபோல், அவரின் மனைவியும், தன்னுடைய மகளை கூட்டிக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்தான், திலீப் இப்படி ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.