vkrnajur vkrnajur Author
Title: பெரம்பலூர் அருகே துக்க நிகழ்சிக்கு கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 500 பறிமுதல்! தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
பெரம்பலூர் : நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்...
பெரம்பலூர் : நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் எசனை அருகே அன்னமங்கலம் கைக்காட்டி என்ற இடத்தில் இன்று வேளாண்மைஅலுவலர் நாகராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காரை மறித்தனர்.
ஆனால், கார் நிற்காமல் அதிவேகமாக சென்றது. இதனால் சந்தேகமடைந்த தேர்தல் பறக்கும் படையினர் சினிமா பாணியில் பெரம்பலூர் புறவழிச்சாலையில் கோனேரிப்பாளையம் பகுதியில் துரத்தி பிடித்து சோதனையிட்டனர்.
இதில் 1 லட்சத்து 62 ஆயிரம் 500 ரூபாயை உரிய ஆவனங்கள் இன்றி சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் அருகே உள்ள மும்முடி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சிவக்குமார்(31) என்பவர் திருச்சிக்கு ஒரு துக்க நிகழ்ச்சிக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற காரை சினிமா பாணியில் தேர்தல் பறக்கும் படையினர் துரத்தி பிடித்து 1,62,500 ரூபாய் பணத்தை பறிமுதல்செய்யப்பட்ட சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top