vkrnajur vkrnajur Author
Title: SSLC மற்றும் +2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எல்லா விடைகளையும் அடித்தால்தண்டனை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் விடைத்தாளில் மாணவ-மாணவிகள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவத்திற்கு தேர...
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் விடைத்தாளில் மாணவ-மாணவிகள் எழுதிய விடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவத்திற்கு தேர்வு எழுத முடியாது என்று அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இயக் குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
கோடிட்டு அடித்தால் தண்டனை:
பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி முடிவடைய உள்ளது. தேர்வுகளை சிறப்பாக நடத்த அனைத்து முன் ஏற்பாடுகளையும் நீங்கள் செய்யவேண்டும்.
இந்த ஆண்டு அரசு தேர்வுத்துறை புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. மாணவ- மாணவிகள் விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே முழுவதுமாக கோடிட்டு அடிக்கும் செயலானது இனி ஒழுங்கீனச்செயலாக கருதப்படும். அவ்வாறு விடைத்தாளில் விடைகளை அடிக்கும் மாணவ- மாணவிகள் அடுத்து வரும் இரு பருவங்களிலும் தேர்வு எழுத முடியாது. இது ஒரு தண்டனை.
விழிப்புணர்வு:

இதை அனைத்து மாணவர்களும் அறியும் வண்ணம் பள்ளிக்கூட பிரார்த்தனை கூடத்தில் கண்டிப்பாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாணையின் படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஆண்டு அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் தமது ஆளுகைக்கு உட்பட்ட தேர்வு மையங்களுக்கான அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவிர மற்றவர்கள் எவரும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை தேர்வு மைய வளாகத்திற்குள் (ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பார்வையாளர்கள், பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் ) கண்டிப்பாக வரக்கூடாது. வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு அவசரம்:
பொதுத்தேர்வு முக்கியத்துவம் கருதி ‘தேர்வு அவசரம்’ என்ற வாசகத்தை தாளில் அச்சிட்டு வாகனங்களில் வழித்தட அதிகாரிகள் ஒட்டவேண்டும். வழித்தட அதிகாரிகள் தங்கள் வழித்தடத்தில் உள்ள தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களின் செல்போன் நம்பரை பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சுற்றறிக்கை பற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நன்றாக படிக்கும் பிளஸ்-2 மாணவர்கள் சிலர் அனைத்து விடைகளையும் சரியாக எழுதிவிட்டு ஒரே ஒரு மதிப்பெண் பெறக்கூடிய விடை தவறாக எழுதி இருந்தால், சரியான விடைகளை அடித்துவிட்டு அந்த தேர்வில் மதிப்பெண் எதுவும் எடுக்காமல் அவர்கள் சிறப்பு உடனடித்தேர்வை எழுதுகிறார்கள். அதில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் இந்த மதிப்பெண்ணை கொண்டு மறு வருடம் உயர்கல்வியில் முதல் மாணவராக சேர்கிறார். இதை தவிர்க்க தான் அரசு தேர்வுத்துறை புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top