Mohammed Farook Mohammed Farook Author
Title: முஸ்லீம் என்றால் பாகிஸ்தான் தானா ? OLX இன் அற்ப புத்தி!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
முஸ்லீம் மதத்தை சேர்ந்த இந்திய தொழில்முனைவோரை பாகிஸ்தான்காரர் என்று குறிப்பிட்ட ஓஎல்எக்ஸ் (OLX) இணையதளத்தால் சமூக வலைதளங்களில் சர்ச்சைய...
முஸ்லீம் மதத்தை சேர்ந்த இந்திய தொழில்முனைவோரை பாகிஸ்தான்காரர் என்று குறிப்பிட்ட ஓஎல்எக்ஸ் (OLX) இணையதளத்தால் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மும்பையை சேர்ந்த மோஹ்சின் கான் என்ற தொழில்முனைவோர், ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் கட்டண முறையில் விளம்பரம் செய்வதற்காக அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தொடர்புக்கொண்டுள்ளார். அதில், யாரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த ஓஎல்எக்ஸ், தங்கள் நிறுவனத்தின் கட்டண விளம்பர சேவை பாகிஸ்தானில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு கோபமடைந்த மோஹ்சின் கான், தான் பாகிஸ்தான் இல்லை என்றும், இந்தியா என்றும் தெரிவித்தார். இந்த உரையாடல் பதிவு, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, தன்னை ஓஎல்எக்ஸ் நிறுவனம் தொடர்புக்கொண்டு பேசியதாகவும் PACKS என்று ஆங்கிலத்தில் இருந்தது பாகிஸ்தான் என்று தவறாக புரிந்துக்கொண்டதாக தெரிவித்ததாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்ததாகவும், மோஹ்சின் கான் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் கான் கேட்டுக்கொண்டார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top