Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூரில் மாவட்ட அளவிலான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் மாவட்ட அளவிலான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது! வி.களத்தூர் சுன்னத் ஜமா...
வி.களத்தூரில் மாவட்ட அளவிலான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் மிக சிறப்பாக நடைப்பெற்றது!

வி.களத்தூர் சுன்னத் ஜமாஅத் மாவட்ட அளவில் நடத்தும் இஸ்லாமிய மாணவர்களுக்கான IAS, IPS மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான விளக்க கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக நிக்காஹ் வளாகத்தில் நடைபெறுகிறது.

இன்று காலை 10.30 மணியளவில் துவங்கியது.

மெளலவி ஹாபீழ் அப்துல் ரஷீத் வி.களத்தூர், இமாம் அவர்கள் கிராத் ஓதி விழாவை துவக்கி வைத்தார்.

அதன்பின் M.கமால் பாஷா அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினர்.

E. தாஹிர் பாட்சா அரும்பாவூர், அவர்கள் பேசியபோது பெரம்பலூரில் நமது சமுதாயத்தில் எத்தனை பேர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் மற்றும் TNPSC போன்ற அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கு எத்தனை பேர் விண்ணப்பம் செய்கிறார்கள் என்பதை பற்றி சிறிது நேரம் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் இறுதியாக சென்னை இல்மி ஐ ஏ எஸ் அகாடமி தலைவர் சம்சுதீன் காஸிமி அவர்கள் மாணவ, மாணவர்களிடம் கலந்துரையாடல் ஆற்றினார், ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஆவது எப்படி படிப்பதற்கு என்ன தகுதி வேணும் என்பதை பற்றி விளக்கம் அளித்தார்.

மேலும் தமிழகத்தில் உள்ள ஏழ்மையான குடும்பத்தில் இருந்து ஐ ஏ எஸ் ஆனவர்கள் பற்றி ஒரு தொகுப்பாக வீடியோவில் கட்டப்பட்டது.

இறுதியாக குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி தருவது பற்றியும் அதில் குழந்தைகள் பார்க்கும் ஆபாச படத்தை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பற்றியும் மிக சிறப்பாக சிறப்புரை ஆற்றினார்.

அதன்பிறகு விழா பிற்பகல் 2.00 மணிக்கு நிறைவுபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் என கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top