Mohammed Farook Mohammed Farook Author
Title: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
தமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது....
தமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது. எனவே புதிய சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று சமீபத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அந்த அடிப்படையில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் 2–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று தெரிகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top