vkrnajur vkrnajur Author
Title: தேமுதிக மாநாடு:தொண்டர்கள் ஏமாற்றம்?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி குறித்த எந்த அறிவிப்பும் வெளியிட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயல...
இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் கூட்டணி குறித்த எந்த அறிவிப்பும் வெளியிட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 
 மாநாடு காஞ்சிபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்தன. பொதுவாக மாநாடு என்றாலே கட்சி உறுப்பினர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதிலும் தேர்தல் நெருங்கிவரும் வேலையில் சொல்லவா வேண்டும். இதற்கு முன்பு 2011-ல் உரிமை மீட்பு மாநாடு என்று சேலத்திலும், 2014ம் ஆண்டு விழுப்புரத்தில் ஊழல் ஒழிப்பு மாநாடு போன்றவைகள் நடைபெற்றன. இந்த வருடம் தேர்தல் நெருங்கி வருவதாலும். எந்தக் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று மாலை காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், எந்த கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடுவார் என்று அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி தமிழக முக்கிய அரசியல் கட்சிகளும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பார்ப்பு தவிடு பொடியாகும் என்றே கூறப்படுகிறது. இது குறித்து அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறியபோது, இன்று நடைபெறும்  மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பில்லை என்றும், இதுவரை எந்த மாநாட்டிலும் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவித்தது இல்லை என்றும் கூறியுள்ளார். இது கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்ற ஆவலில் இருந்த தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top