vkrnajur vkrnajur Author
Title: கார் விபத்து-பொய்யான தகவல்-மதிமுக விளக்கம்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
வைகோ கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியானதாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் வெளியாகியுள்ளதாக மதிமுகவின் கருத்து தெரிவித்துள்ளது .     ...
வைகோ கார் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியானதாக வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் வெளியாகியுள்ளதாக மதிமுகவின் கருத்து தெரிவித்துள்ளது.  

இது குறித்து, மதிமுக சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடந்த 17 ஆம் தேதி பழனி உடுமலை ரோடு சண்முகநதி பாலம் அருகே கோவையில் இருந்து வந்த மினி லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தில் சென்ற இரு வாலிபர்களும் உயிர் இழந்ததை  அந்த வழியாக வந்த வைகோ கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தார். உடனே காரை நிறுத்தி விசாரித்து விட்டு வேதனை அடைந்து கண்ணீர் விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தி பத்திரிக்கைகளிலும் வெளிவந்தது. வாட்ஸ் அப்பில் வைகோவின் கார் விபத்து ஏற்படுத்தியதாக அவருடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான செய்தியை சிலர் பரப்பி வருகின்றனர்.

எனவே, பொய்ப் பிரசாரம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top