Mohammed Farook Mohammed Farook Author
Title: ஆன்லைனில் ‘இதையெல்லாம்’ செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்..!?
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். அப்படியாக பயனாளிகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கும் இன்...
நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் இன்டர்நெட் என்பது பொது தான். அப்படியாக பயனாளிகளுக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்கும் இன்டர்நெட் ஆனது சில குறிப்பிட்ட நாடுகளில் பலவகையான கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது என்பது தான் நிதர்சனம்.

அப்படியாக, குறிப்பிட்ட நாடுகளில் ஆன்லைனில் நீங்கள் ‘என்னவெல்லாம்’ செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்பதைப்பற்றிய தொகுப்பே இது..!

1 திறந்தவெளி வைபை :
பாஸ்வேர்ட் இல்லாத உங்களின் வெளிப்படையான திறந்தவெளி ‘வைபை’யை சமூக விரோதிகள், தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் நீங்களும் கைதாகலாம். இந்த சட்டமானது கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 சேர்ச் ஹிஸ்ட்ரி :
ஹேக் (Hack) போன்ற சைபர் குற்றங்களில் (Cyber Crimes) ஈடுபடுபவர்கள் தங்களின் சேர்ச் ஹிஸ்ட்ரியை (Search History) அழிப்பது சகஜம் ஆகையால் இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு கைது சட்டம் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியா :
கடைசி 3 மாத சேர்ச் ஹிஸ்ட்ரியை அழிக்க கூடாது என்று இந்தியாவிலும் சட்டம் அமலாக்கப்பட்டு பின் பலத்த எதிர்ப்புக்கு பின், திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3 போஸ்ட் அல்லது ட்வீட் :
மனதை புண்படுத்துகிற, அவமதிப்பான ஃபேஸ்புக் போஸ்ட் அல்லது ட்வீட் செய்தால், நீங்கள் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது பிரச்சனையில் தான் முடியும்.

4 வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் :
வாய்ஸ் ஓவர் இண்டர்நெட் ப்ரோட்டோகால் (Voice over Internet Protocal – VOIP) இணையவழி ஒலி பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படுவீர்கள். எத்தியோப்பியாவில் மட்டுமே குறிப்பிட்ட மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் இந்த சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 வீடியோவில் நடனம் :
ஆம். வீடியோவில் நடனம் ஆடினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஈரானில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

ரஷ்யா :
ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடம் முன்பு நடனம் ஆடி, வீடியோ வெளியிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

6 இன்டர்நெட் கமெண்ட் :
சிரியாவில் இன்டர்நெட்டில் கமெண்ட் பதிவு செய்வது கூட குற்றம் தான். அதற்காக நீங்கள் கைது செய்யப்படலாம்.

7 மொழிமாற்றம் :
தடை செய்யப்பட்ட புத்தகத்தை மொழிமாற்றம் செய்தால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

8 சூதாட்டம் :
உலகின் பல நாடுகளிலும் ஆன்லைன்னில் சூதாடுவது சட்டப்படி குற்றமாகும்
.
9 ஃபைல் பரிமாற்றம் :
ஃபைல் பரிமாற்றம் என்பது சர்ச்சைக்குரிய பிரச்சனையாகும். சில நாடுகளில் பாடல்கள், புகைப்படங்கள், திரைப்படங்கள் என எதையும் பரிமாறிக்கொள்ளமுடியும், சில நாடுகளில் இது முடியாது. மேலும் அது நீங்கள் எதை பரிமாற்றம் செய்கிறீர்கள் என்பதையும் பொருத்தது.

10 ஃபேஸ்புக்கில் பாடல் வரிகள் :
அமெரிக்காவில் ஃபேஸ்புக்கில் பாடல் வரிகளை போஸ்ட் செய்ததற்காகவும் ஒருமுறை கைது சம்பவம் நடந்துள்ளது.
இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top