Mohammed Farook Mohammed Farook Author
Title: மனைவியை விற்பனை செய்த கணவன்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வரதட்சணையை கொடுக்காததால் தான் திருமணம் செய்த மனைவியை விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாந...
வரதட்சணையை கொடுக்காததால் தான் திருமணம் செய்த மனைவியை விற்பனை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் டிகுபடிகர். இவர் பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி திருமணம் செய்தார். இந்த திருமணத்திற்கு வரதட்சனையாக, மோட்டார் சைக்கிளும், ரூ. 2 லட்சம் பணமும் தருவதாக மணமகளின் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், அவர்களால் சொன்னதை கொடுக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த மணமகன் வீட்டார் திருமணமான நாளிலிருந்தே அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். 

சித்திரவதையின் உச்சக்கட்டமாக தான் திருமணம் செய்த பெண்ணை ஆபாச படம் எடுக்கும் இயக்குநர் ஒருவருக்கு டிகுபடிகர் ரூ.7 லட்சத்திற்கு விற்று விட்டார்.

அந்த கும்பலிடமிருந்து தப்பி வந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து டிகுபடிகர் குடும்பம் தலைமறைவாகி விட்டது. அவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top