Mohamed Farook Mohamed Farook Author
Title: சவூதி வாழ் நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி - சவூதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் ...
சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி -

சவூதியிலிருந்து ஊருக்கு செல்லும்போது விமான நிலையங்களுக்குகுறைந்தது 4 மணிநேரத்திற்கு முன் செல்வது நல்லது.
காரணம் இப்போது போகும்போதும் நீங்கள் உங்கள் விரல் அடையாளம் Finger Print கொடுக்கவேண்டியுள்ளது பரிசோதனைக்காக. ஏற்கெனவே நமது பாசத்திற்குரிய சவூதிகள் எவ்வளவு வேகமாக வேலை செய்வார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரியும்.

குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன்னதாக போர்டிங், எமிக்ரேஷன் போன்ற கவுண்டர்களின் சேவை நிறுத்தப்படுகிறதாம்.

இதைவிட முக்கியமான விஷயம் எந்த நிறுவனத்தின் ஃபிளைட்டுக்கு டிக்கெட் எடுத்தாலும் டிக்கெட் எடு்க்கும் டிராவல்ஸில் உங்கள் பேக்கேஜ் எத்தனை கிலோ அணுமதி என்பதை சரியாக ஒவ்வொருமுறையும் கேட்டு தெழிவு பெற்றுக்கொள்ளுங்கள்.

காரணம் திடீரென ஜெட் விமானம் 5 நாட்களுக்கு மட்டும் 30 Kg + 7kg என்று கழிந்த இரண்டு மாதங்களில் 3 முறை மாற்றியது.

அன்றைய நாட்களில் நமது பல சகோதரர்கள் விஷயம் தெரியாமல் 40+ மற்றும் கையில் 7+ கொண்டுபோய் திருப்பி கொண்டுவர முடியாமல் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதை பார்த்தபோது மனதுக்கு வருத்தமாகவே இருந்தது.

இந்த செய்தி உங்களுக்கு பயன்பெறும் என்று நம்புகிறேன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top