Mohammed Farook Mohammed Farook Author
Title: ஸ்மார்ட்போன் அபாயம்!!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
எங்கே வசதி அதிகம் இருக்கிறதோ, அங்கேதான் அபாயமும் அதிகமாக இருக்கும் என்பது ஸ்மார்ட் போனை பொறுத்தவரை உண்மையாகி வருகிறது. தற்போது அனைவரின்...
எங்கே வசதி அதிகம் இருக்கிறதோ, அங்கேதான் அபாயமும் அதிகமாக இருக்கும் என்பது ஸ்மார்ட் போனை பொறுத்தவரை உண்மையாகி வருகிறது.

தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. உலகில் பெரும்பான்மையானவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர்.

அடிப்படையில் ஸ்மார்ட் போன் ஒரு தொலைத்தொடர்புச் சாதனம் என்றாலும், அது அதிகம்
பொழுதுபோக்குக்குத்தான்
உபயோகிக்கப்படுகிறது.

பலரும், ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப், லைன், வீ சேட், வைபர், பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில்
மூழ்கிப்போகின்றனர். இப்படி நேரம், காலம், சூழல் மறந்து ஸ்மார்ட் போனில் ஆழ்ந்துவிடுவதால் விபத்தில் சிக்கும் அபாயமும் அதிகரிக்கிறது.

ஆண்டுதோறும் ஸ்மார்ட் போனால் உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில்
உள்ளது. அதில் செல்பி மோகத்துக்கு ஒரு குறிப்பிட்டதக்க பங்கு உண்டு. சீனா போன்ற நாடுகளில், ஸ்மார்ட்போன்
பயன்படுத்துபவர்களுக்கு என்றே சாலையில் தனிப்பாதை உருவாக்கும் நிலை
ஏற்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு
வெளி அபாயங்கள் ஒருபுறம் என்றால், அதிகப்பயன்பாடு காரணமாக செவித்திறன், பார்வைத்திறனில் பாதிப்பு,
கதிரியக்க பாதிப்பு போன்ற அபாயங்களும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

ஸ்மார்ட் போன் அடிமைகளாகி வரும் இன்றைய இளைய சமுதாயத்தினர், அதை கொஞ்சம் அளவோடு பயன்படுத்துவது நல்லது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top