Mohammed Farook Mohammed Farook Author
Title: நரேந்திர மோடியுடன் டெல்லி இமாம் திடீர் சந்திப்பு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி நேற்று  பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஐ.எஸ். இயக்கத...
டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி நேற்று  பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு எனக்கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது
செய்யப்படுவதற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார். ஐ.எஸ், இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி இளைஞர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்றும் மோடியிடம் ஷாகி இமாம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தீவிரவாத குற்றச்சாட்டுகளில் பெரும்
எண்ணிக்கையில் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் வாடி
வருகின்றனர்.

இது போன்ற கைது நடவடிக்கையின் போது
வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் பிரதமரிடம் இமாம் வலியுறுத்தியதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுபான்மை கல்வி நிலையங்களான ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம்
பல்கலைக்கழகங்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதற்கு பிரதமர் மோடி, இந்த பிரச்சினைகள் குறித்து
கவனிப்பதாகவும், மத ஒற்றுமை பாதிக்கப்படும் வகையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் உறுதி அளித்ததாக இமாம் சையது புகாரி தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top