vkrnajur vkrnajur Author
Title: அமெரிக்க அதிபர் தேர்தல்..போதிய ஆதரவு இல்லை பிரசாரத்தை முடித்துக்கொண்டார் -ஜெப் புஷ்
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போதிய ஆதரவு இல்லாததால், தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர...
அமெரிக்க அதிபர் தேர்தலில் போதிய ஆதரவு இல்லாததால், தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபள்யூ புஷ்சின் இளைய சகோதரருமான ஜெப் புஷ் போட்டியிடுகிறார்.
இவர் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும் புளோரிடா மாகாணத்தின் மியாமி நகரில் தனது பிரசாரத்தை தொடங்கிய ஜெப் புஷ், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆதரவு திரட்டி வந்தார். தேர்தலுக்கான நிதிதிரட்டுதல் மற்றும் விவாத மேடைகளில் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் ஈடுகொடுக்க முடியாமல் பிரசாரத்தின்போது திணறிவந்த ஜெப் புஷ், இயோவா, நியூ ஹாம்ப்ஷைர் பகுதிகளில் நடத்திய பிரசாரக் கூட்டங்கள் படுசொதப்பலாகிப் போனது.
இதையடுத்து, தெற்கு கரோலினாவில் நேற்று நடத்திய பிரசார நிகழ்ச்சியும் படுமோசமாக அமைந்ததால் அதிபர் பதவிக்கான தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்வதாக ஜெப் புஷ் அறிவித்துள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top