Mohamed Farook Mohamed Farook Author
Title: “இளைஞர்களே அதிகமாக தற்கொலைக்கு முயல்கிறார்கள்’
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
இளைஞர்களே அதிகமாக தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் என்று தற்கொலைகள் தடுப்பு இயக்கமான ஸ்நேகா இயக்குநர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறினா...
இளைஞர்களே அதிகமாக தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள் என்று தற்கொலைகள் தடுப்பு இயக்கமான ஸ்நேகா இயக்குநர் டாக்டர் லட்சுமி விஜயகுமார் கூறினார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
கடந்த 30 ஆண்டுகளில் 3 லட்சம் பேர்களுக்கு தற்கொலை தடுப்புக்கான இயக்கம் சார்பில் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

1980-களில் ஒரு லட்சம் பேரில் 10 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அந்த எண்ணிக்கை இப்போது 23 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையில் 2004 முதல் 2009 வரை அதிக எண்ணிக்கையில் தற்கொலைகள் நிகழ்ந்தன. 2004-இல் 407 பேராக இருந்தனர்.

2014-இல் 247ஆக குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், வேலையில் அழுத்தம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதிகபட்சமாக 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களை தற்கொலைக்கு அதிகம் முயல்கிறார்கள் என்றார்.

இனி செய்திகளை உங்கள் மொபைல்களிலேயே உடனுக்குடன் கண்டுகளிக்கலாம். (playstore)யில் ஆன்ராய்டு (Android) அப்லிகேஸன் DOWNLOAD செய்துகொள்ள படத்தை கிளிக் செய்யுங்கள் 
  

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top