vkrnajur vkrnajur Author
Title: கருணாநிதியிடம் பேச வேண்டுமா? இதோ?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
உங்கள் மொபைல் போனில் இருந்து மிஸ்டுகால் கொடுத்தால், உங்களுக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பதில் அளிப்பார்.   தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ...

உங்கள் மொபைல் போனில் இருந்து மிஸ்டுகால் கொடுத்தால், உங்களுக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பதில் அளிப்பார்.  


தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கூட்டணி வியூகத்திலும், தேர்தல் பிரச்சாரத்திலும் அரசியல் கட்சிகல் தீவிரமாக இறங்கியுள்ளன.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘முடியட்டும்.. விடியட்டும்..’ என்ற முழக்கத்தோடு, நமக்கு நாமே என்கின்ற பெயரில் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மழை வெள்ள பாதிப்பை ஒட்டி, ’வாட்ஸ் ஆப்’-இல் மக்களிடையே உரையாற்றும் யுக்தியை கையாண்டார்.
 
மக்கள் நலக் கூட்டணியினர் மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களை தொடர்ந்து பொதுக்கூட்டங்களை நடத்தி பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ‘அரசியல் திருப்பு முனை மாநாடு’ என்ற பெயரில் காஞ்சிபுரத்தில் வரும் 20ஆம் தேதி மாநாடு நடத்த உள்ளார்.
 
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முதன் முதலாக செல்போனில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். பொதுமக்கள் 72200 72200 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், கருணாநிதி திரும்ப அழைத்து 30 விநாடிகள் பேசுவார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top