vkrnajur vkrnajur Author
Title: அமெரிக்காவில் வினோதம் : ஒருநாள் மேயராக பதவியேற்றது நாய்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஒருநாள் மேயராக அமெரிக்க நாய் ஒன்று அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ரீனோ மாநகரில், கடந்த வியாழக்கிழமை அன்று உலகையே ஆச்சரியப் படுத்தும் ஒர...
ஒருநாள் மேயராக அமெரிக்க நாய் ஒன்று அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ரீனோ மாநகரில், கடந்த வியாழக்கிழமை அன்று உலகையே ஆச்சரியப் படுத்தும் ஒரு நிகழ்வு அரங்கேறியது.
உலகில் உள்ள வாய் இல்லா பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாம் தினந்தோறும் பார்த்து கொண்டிருக்கும் ஒன்றே.
நீர் வாழ் உயிரினங்களுக்கு கடலும், ஆறும், குளமும் உள்ளன. வேட்டையாடும் விலங்குகள் காடுகளில் வாழும். சில வகை கால்நடைகள் நம் வீடுகளில் வளர்க்கப்படும். 
ஆனால், அதிலும் போதிய கவனிப்பு கிடைக்காமல், வீடு உணவின்றி சாலைகளிலும், பாலங்களுக்கு அடியிலும் சுற்றித் திரிந்து. வாகனங்களில் அடிபட்டும் இறந்து போகும். மற்றவை போல, இவற்றிற்க்கும், பாதுகாப்பான இருப்பிடம் பெற சம உரிமை உண்டு. பூமி அனைத்து உயிரிங்களுக்கும் வீடு.
இதனை உணர்த்த லிசா ரோசன் மற்றும் ராபர்ட் ஸ்டேச்சோ தங்களுடைய 5 வயது எவரெட் நாய்க்காக எஸ்.பி.சி.ஏ (Society for Prevention of Cruelty to Animals) நடத்திய ஏலத்தில் பங்கேற்று, ஆயிரம் டாலர்கள் வைத்து வெற்றி பெற்றனர்.
ஏலம், ரீனோ நகரின் ஒரு நாள் மேயர் பதவிக்கு. பெரிய புள்ளிகளும் பிரபலங்களும் மட்டுமே பயன்படுத்தும் லிமௌசின் காரில் எவரெட் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.
புதிய மேயராக தேர்ந்தெடுக்கப் பட்ட எவரெட் நாய், நியூஃபவுண்ட் லேண்ட் மற்றும் லேப்ரேடர் வகையின் ஒரு கலவை.
எவரெட் தனக்கு வழங்கப் பட்ட மேஜர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டது. ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த மேயர் ஹிலாரி ஷீவ், மாநகரக் கழகத்தின் சார்பில், அதன் பதவி ஏற்ப்பிற்கு அதிகாரப் பூர்வமான பிரகடனம் செய்தார். பின்னர் பேசிய எஸ்.பி.சி.ஏ குழு, வீடில்லா விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த முயற்சி எடுத்துள்ளதாகக் கூறினார்.
அந்த நாள் முடிவில், எவெரெட் மீண்டும் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. அதனுடைய இந்தப் பணிக்கு, ஓய்வுச் சலுகைகளும் வழங்க வடக்கு நெவாடாவின் எஸ்.பி.சி.ஏ செயற்குழு இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
இதில், ஒரு நாய் படுக்கை, சாப்பாட்டுக் கின்னம், ஒரு பரிசு மற்றும் 60 பவுண்ட் நாய் உணவும் வழங்கப் படவுள்ளது. இது உலகளவில் வீடில்லா பிராணிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top