vkrnajur vkrnajur Author
Title: மைக்ரோ உறுப்புடன் வாழ்ந்த ஹிட்லர்? ௯டுதல் தகவல்!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் குறித்த மருத்துவ அறிக்கை ஒன்று, அவருக்கு ஒரே ஒரு டெஸ்டிகிள் இருந்துள்ளது என தெரிவிக்...
ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் குறித்த மருத்துவ அறிக்கை ஒன்று, அவருக்கு ஒரே ஒரு டெஸ்டிகிள் இருந்துள்ளது என தெரிவிக்கின்றது.
இது பற்றி இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பள்ளி குழந்தைகளால் கடந்த 10 ஆண்டுகளாக ரைமிங் ஒன்று பாடப்பட்டு வருகின்றது. அடால்ப் ஹிட்லருக்கு கடந்த 1923ம் ஆண்டு சிறை செல்வதற்காக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
அது பற்றிய மருத்துவ அறிக்கையில் அவருக்கு வலது பக்க விதைப்பை (டெஸ்டிகிள்) சேதமுற்று இருப்பது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே அறிக்கையில் ஆண் குறி துளை பிறழ்வு காரணமாக கிட்லருக்கு மைக்ரோ ஆண்குறி பொருத்தப்பட்டு இருந்ததாகவும் அது உருக்குலைந்து இருந்ததகவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த குறைபாட்டால் பாதிக்கபட்டவர் சிறுநீர் கழிக்க அடிப்பகுதியில் சிறிய துளையிட்டு சிறுநீர்கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனினும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய டாக்டர் ஜோசப் ஸ்டீனர் பிரின், ஆரோக்கியம் மற்றும் உடல் பலத்துடன் ஹிட்லர் இருக்கிறார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கை கடந்த 2010ம் ஆண்டு ஏலத்திற்கு வந்தது. அதனை பவேரியன் அரசாங்கம் பறிமுதல் செய்தது. அதன்பின்பு அந்த அறிக்கை இதுவரை கிடைக்க பெறவில்லை.
இதனை அடுத்து எர்லேங்கன்-நியூரெம்பெர்க் பல்கலை கழகத்தை சேர்ந்த பேராசிரியர் பீட்டர் பிளெய்ஸ்க்மேன் என்பவர் மருத்துவ அறிக்கை குறிப்புகளை கண்டெடுத்து சமீபத்தில் ஆய்வு செய்துள்ளார்.
ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையான பில்டுக்கு அளித்துள்ள பேட்டியில், ஹிட்லரின் ஒரு விதைப்பை பிறக்கும்பொழுது குறைபாடுடன் இருந்துள்ளது என குறிப்புகளில் இருந்து தெரிய வந்துள்ளது என கூறியுள்ளார்.
ஹிட்லருக்கு தனது 56 ஆண்டு காலத்தில்,செக்ஸ் வாழ்க்கை இல்லாததுதான் அவரது மிகபெரிய கோபத்திற்கு காரணம் என வரலாற்று ஆசிரியர்கள் விளக்குகிறார்கள்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top