vkrnajur vkrnajur Author
Title: குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவட...
குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை
குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாலகிருஷ்ணனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் காமராஜ், தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 4 லட்சத்துக்கும் அதிகமான போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குடும்ப அட்டைகளுக்காக கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக பரீட்சார்த்த முறையில் ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
பெரம்பலூர் மற்றும் அரியலூரில் இந்த பரீட்சார்த்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளது
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாக, ஊரக தொழில் துறை அமைச்சர் மோகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதன் பின்னர், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
பின்னர், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முத்துசெல்வியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மோகன், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளதாகவும், 2011ம் ஆண்டுக்கு பிறகு 23 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு பொறுப்பேற்ற பின் 39 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top